நாடாளுமன்றிலிருந்து வெளியேறிய சபாநாயக்கர்…

இன்று காலை  நாடாளுமன்றில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமானபோது மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

இதன்போது  நேற்யை தினம் தன்  மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்களிப்பு சபாநாயகரால் குரல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகிந்த  குறிப்பிட்டுள்ளார்.

அதோடு  நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை பிரதமர் மீதும் அரசாங்கத்தின் மீதும் கொண்டு வருவதாக இருந்தால்,அதனை வாக்களிப்பின் பெயர் குறிப்பிட்டு மேற்கொள்ள வேண்டும் எனவும்  மகிந்த கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய  ஐ. தே. கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல , மஹிந்தவின் உரையில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையல்ல என கூறியதோடு, இன்றும் மீண்டுமொரு வாய்மூல நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி நகர்ந்துள்ளனர்.

அவ் வேளையில்  சபாநாயகரை பாதுகாப்பதற்காக ஐ. தே. முன்னணியைச் சேர்ந்தவர்களும் படைக்கல சேவியர்களும் அவ்விடத்தில் குவிந்துள்ளனர்.

இதன்போது இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்தும் கைகலப்பாக மாறி நிலையில், சபாநாயகர் தனது ஆசனத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிகபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைகலப்புசபாநாயக்கர்நாடாளுமன்றம்பிரதமர்வெளியேற்றம்