“அங்கு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மற்றொரு தகவல் வெளியாகியது. இதனால், அங்கு கலவரம் ஏற்படலாம் என்ற சந்தேகத்தினால், விகாரையையும் அங்கு வருகை தந்த பிக்குமார்களையும் பிரதேசவாசிகளையும் பாதுகாப்பதற்காகவே, பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும், அங்குள்ள பாதையை மூடுமாறு கோரி நீதிமன்றத்தினால் தடையுத்தரவு விதிக்கப்படவில்லை ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவைக் கிழித்தெறிந்தமையானது, சரியானதொரு விடயம் என்று கருத முடியாது. நீதிமன்றத்தின் தடையுத்தரவை கிழித்தெறிந்து நீதியை அவமதித்த பிக்குவை கைதுசெய்ய முடியுமேயொழிய, வேறெதுவும் செய்ய முடியாது” என்றார்.