பத்து ஆண்டுகளாக எங்கள் பூர்வீக மண்ணில் வாழும் உரிமை இழந்து தொழிலாளர் தினத்தில் வீதி ஓரத்தில் போராடிக்கொண்டிருக்கிறோம் -கேப்பாபுலவு மக்கள்…

791 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் 01.05.19 அன்று ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.இந்த ஊடக சந்திப்பின் போது போராட்டத்திலீடுபடும்  சந்திரலீலா மற்றும் அரியகலா ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அரியகலா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது..

நாட்டில் அசாதாரண சூழ்நிலை காணரமாக கொல்லப்பட்ட பொதுமக்களின் ஆத்மா சாந்தி வேண்டி கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாங்கள் இன்று 01.05.19  இன்று  791 ஆவது நாளாக பூர்வீக வாழ்விடம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்

போராட்ட காலத்தில் தொழிலாளர் தினத்தினை மூன்றாவது தடவையாக வீதியோரத்தில் சந்தித்துள்ளோம் நாங்களும் விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் இன்று பத்து ஆண்டுகளாக எங்கள் பூர்வீக மண்ணில் வாழும் உரிமை இழந்து அகதிகளான நிலையில் மூன்று ஆண்டுகளாக வீதி ஓராத்தில் போராடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு அரசினால் ஒரு தீர்வு எட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்

கடந்த மாதம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் காணி தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்ட போது அதற்கான நிறைவேற்று செயற்பாட்டை வடக்கு ஆளுனரிடம் ஒப்படைக்கப்பட்ட பட்சத்திலும் ஒரு மாதம் கடந்தும் செயற்பாடுகள் எதனையும் நாங்கள் காணவில்லை.

இன்று உயிரிற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் எங்கள் பூர்வீக வாழ்விடம் கேட்டு தொடர்ச்சியகா போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றோம்.

எங்கள் பிரச்சனையில் அரசும்,சர்வதேசமும் கரிசனை காட்டி மிகவிரைவில் தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்பதை மே தின நாளில் கோரி நிக்கின்றோம் என்றும் அரியகலா அவர்கள் தெரிவித்துள்ளார்.

சந்திரலீலா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது..

கேப்பாபுலவு பூர்வீக மக்கள் ஆகிய நாங்கள் மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் மூன்றாவது தொழிலாளர் தினத்தினை சந்தித்துள்ளோம்.

கேப்பாபுலவு மக்களை பொறுத்தமட்டில் விவசாயகுடும்பங்களும்,கடற்தொழில் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றார்கள்

தொழில் இல்லாத நிலையில் இந்த மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றார்கள் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும் அச்சத்தின் மத்தியிலும் நாங்கள் போராடுகின்றோம் எங்கள் நிலங்களை மீட்கவேண்டும் என்ற முனைப்பில் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் எங்களுக்கும் எந்த நிலையிலும் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் நாங்கள் இருக்கின்றோம் இன்று நாட்டில் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது நாங்கள் ஒன்றுகூடக்கூடாது என்ற நிலையில் கூட நாங்கள் போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம்.

எங்கள் பூர்வீகமான நிலத்தினை மிகவிரைவில் மீட்கவேண்டும் எங்கள் நிலம் எங்களுக்கு விடும் வரை எந்த நிலை வந்தாலும் எங்கள் போராட்டத்தினை கைவிடமாட்டோம் தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்தினை முன்னெடுப்போம் என்றும்  எங்கள் பூர்வீகமான நிலத்தினை விடுவிக்க அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் ஆவணம் செய்யவேண்டும் என்றும் கேப்பாபுலவு போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சந்திரலீலா தெரிவித்துள்ளார்.

கேப்பாபிலவுமக்கள்
Comments (0)
Add Comment