பயங்கரவாத தடைச்சட்ட வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரும் – சட்டமா அதிபர் உறுதிமொழி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு, சட்டமபா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பவுண்டேசனில் நேற்று இடம்பெற்ற தேசிய சிறைக்கைதிகள் நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 பேரின் வழக்குகளை துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் என்னிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த வழக்குகளை நாளாந்த அடிப்படையில் விசாரிக்குமாறு தாம் அழுத்தம் கொடுக்கப் போவதாகவும், ஏதாவது வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்படுவதாக இருந்தால் அது இரண்டு வாரங்களுக்கு மேற்பட்டதாக இருக்காது என்றும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும்.” என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

உறுதிமொழிசட்டமா அதிபர்பயங்கரவாத தடைச்சட்டமுடிவுவழக்கு
Comments (0)
Add Comment