பலாலி விமான நிலையத்துக்காக, நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், 300 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க முன்வைத்திருந்தார். அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்காக, பலாலி விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் விமான நிலையத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்போது, துரிதமாக இடம்பெற்று வருகின்றன.