இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையம் உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியான பயணிகள் விமான சேவைகளை நடத்தும் வகையில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாகவும், இது நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படமாட்டாது எனினும் பயணிகள் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் புனரமைப்புச் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிய விமானங்களை மாத்திரமே ம் பலாலி விமான நிலையத்தில் இயக்க முடியும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.