பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கும் இடையில் சந்திப்பு…

பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில்  சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இலங்கை இராணுவ காலாட் படையணியின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவெலான, பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளை வரவேற்றுள்ளார்

சந்திப்பில் பாகிஸ்தான் இராணுவ காலாற்படை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அபித் ரபீக் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க ஒருமைப்பாடு தொடர்பான விடயங்கள் குறித்த சந்திப்பில்  கலந்துரையாடப்பட்டதாக தெரிவிகபடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள்இராணுவம்இலங்கைசந்திப்புபாகிஸ்தான்
Comments (0)
Add Comment