பாதரச தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்களுக்கு இழப்பீடு

கொடைக்கானலில் மூடப்பட்ட பாதரச தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க யூனிலிவர் நிறுவனம் உறுதியளித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள யூனிலிவர் நிறுவனத்தின் பாதரச தெர்மாமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.   இந்த தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பாதரசம் பயன்படுத்தப்பட்டதால் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் யூனிலிவர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து பாதரச தொழிற்சாலையை மூட மாசு கட்டுபாட்டு வாரியம் உத்திரவிட்டது. இந்நிலையில், இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் இழப்பீடு வழங்ககோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.   இதையடுத்து யூனிலிவர் நிறுவனம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக யூனிலிவர் நிறுவனம் உறுதியளித்ததால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இழப்பீடுஉறுதிகொடைக்கானல்தொழிற்சாலைதொழிலாளர்நிறுவனம்பாதரசம்யூனிலிவர்
Comments (0)
Add Comment