யாத்திரிகைக்காகச் சென்ற போது, அங்கு நிலவிய கடும் குளிர் காரணமாகவே இவர்கள் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள், மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். இவர்களின் மரணம் தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தியது.
“இந்தியாவுக்கு யாத்திரிகைக்காகச் சென்றிருந்த 3 இலங்கையர், காலமாகியுள்ளனர் என்பதை, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உறுதிப்படுத்துகிறது. அமைச்சின் உதவியுடன் அவர்களது சடலங்கள், இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. “சம்பந்தப்பட்ட குடும்பங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கும் முகமாக, இதுவிடயத்தில் மேலதிக தகவல்களை வழங்க முடியாத நிலையில், அமைச்சுக் காணப்படுகிறது” என்று, அமைச்சின் அறிவிப்புத் தெரிவித்தது.