புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வசித்துவந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சுதந்திரபுரம் மத்தி 40 ஏக்கர் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சத்தியசீலன் கிருஜன் என்பவர் 22 ம் திகதி காணவில்லை எஅன முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள அவனது சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்திவிட்டு வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை என சிவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0774769824 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.