புத்தர் சிலை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் 7 பேர் கைது…

கண்டி மற்றும் மாவனல்லை பகுதிகளில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தியமை தொடர்பில்   ஏழு பேர்  கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அதோடு  விஷமிகளால் மேற்படி பிரதேசங்களில் இனவாதம் தூண்டப்படுவதை தடுக்கும் வகையில் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிகைககளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  சம்பவம் தொடர்பில்  சி.ஐ.டியினர்  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  ஆறு பேர் நேற்றையதினம்  மாவனெல்லை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது,  அவர்களை   எதிர்வரும் ஜனவரி இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்கள்சிலைசேதம்புத்தர்
Comments (0)
Add Comment