புலி உறுப்பினர்களை நினைவு கூற எவராவது முற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – ருவான் விஜேவர்தன

போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

போரின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளை நினைவுகூர அனுமதி இல்லை. இதனையும் மீறி எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுட்டிக்க முற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜேவர்தன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த சனிக்கிழமை, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நல்லூரில் அனுட்டிக்கப்போவதாக அறிவித்ததுடன், இதற்கு அனைத்து உரிமையும் தமக்கு இருப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்பினர்கள்சட்டநடவடிக்கைநினைவு நாள்போர்மக்கள்ருவான் விஜேவர்தனவிடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment