பூநகரியில் சிங்களவருக்கு விற்கப்பட்ட காணியில் வரணி வதை முகாம் சடலங்கள்?

 

போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் புதையல் பூசை என்ற பெயரில் சடலங்கள் தோண்டப்படுவதாகவும் தெரிவித்து பூநகரியில் இன்று பரபரப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பூநகரி கௌதாரிமுனை – பரமன்கிராயில் அந்தப் பகுதியை சேர்ந்த மூவர் போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோதமாக மக்களின் காணிகளை விற்பனை செய்துள்ளனர். அக் காணிகள் பலகோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் காணிகளை வாங்கியவர் புதையல் எடுக்கும் நோக்கில் பூசை செய்தார் என்றும் இதன்போது சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன என்றும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த உடலங்கள் வரணி வதை முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய இந்தக் காணி இனம் காணப்பட்டடே போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

சடலங்கள்பூநகரிவதைமுகாம்வரணி
Comments (0)
Add Comment