இந்நிலையில் நேற்று இரவு முருகன், லட்சுமிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து லட்சுமியைத் தாக்கியிருக்கிறார். இதைப்பார்த்த மகள் இருளாயி தாயைக் காப்பாற்ற முயன்றிருக்கிறாள். அப்போது கோடாரி இருளாயி மீது பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இருளாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் முருகனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.