பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர்,கடந்த ஒரு மாதத்தில் நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி தகவல நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சபையில் வெளியிட்டுள்ளார்..
பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.