மட்டக்களப்பில் இரு இளைஞர்கள் கைது..

மட்டக்களப்பு வெல்லாவெளி  திக்கோடை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில் குறித்த பிரதேசத்திலுள்ள வீடுகளை சோதனையிட்ட போது 500 மில்லி கிராம் மற்றும் 1000 மில்லி கிராம் கஞ்சாவை சந்தேக நபர்களிடமிருந்து  பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும்   கைது செய்யப்பட்ட இரு  சந்தேக நபர்களையும்  நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த  உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சாகைதுபொலிஸார்மட்டக்களப்புவெல்லாவெளி
Comments (0)
Add Comment