மத்திய வங்கி மோசடி அறிக்கை குறித்த விவாதம் எப்போது இடம்பெறும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பான அறிக்கை குறித்த விவாதம் எப்போது இடம்பெறும் என

நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த அறிக்கை மூன்று மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் விவாதம் இடம்பெறும் என தெரிவித்திருந்த போதும்,

குறித்த விவாதம் எப்போது இடம்பெறும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு  பதிலளித்த  சபாநாயகர் கரு ஜெயசூரிய, குறித்த விடயம் தொடர்பில் கடந்த தினம் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக  கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தமக்கு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதில் குறித்த அறிக்கையை மொழிமாற்றம் செய்யும் பணிகளுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த அறிக்கை ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்டிருப்பதால், அது அரச மொழிகள் திணைக்களத்தினால் தற்போதும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் சபாநாயக்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆங்கில மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படாத ஏனைய ஊழல் அறிக்கைகளைத் தவிர்த்து, சிங்கள மொழியில் இருக்கின்ற மத்திய வங்கியின் முறிவிநியோக மோசடி குறித்த அறிக்கை தொடர்பான விவாதத்தை மாத்திரமேனும் நடத்துமாறு விமல்வீரவன்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு  பதில் அளித்த சபாநாயகர், இரண்டு அறிக்கைகளையும் ஒரே சமயத்தில் விவாதிப்பதே சிறந்தது என, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த  விடயம் தொடர்பில் கலந்தாய்வு செய்து, உடனடியாக பதில் வழங்குவதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , புனர்வாழ்வு அதிகார சபையினால் யுத்தப் பாதிப்புக்கு உள்ளானோருக்கு வழங்கப்படுகின்ற நக்ஷ்ட ஈட்டை, முன்னாள் போராளிகளும் பெற்றுக்கொள்ளவேண்டுமென, டக்ளஸ் தேவாநந்தா கூறியுள்ளார்.

இதுதொடர்பான கேள்வியை மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் அவர் முன்வைத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்த அமைச்சரவை பத்திரத்தை அங்கீகரிக்க உதவுமாறு, அமைச்சர் சுவாமிநாதன்,  டக்ளஸ் தேவாநந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி பகுதியில் அரசியல் கைதி ஒருவர், தமது மனைவின் மரணசடங்கிற்கு சென்று, மீண்டும் சிறை திரும்பிய போது ,  அவரது மகளும் சிறைச்சாலை வாகனத்தில் ஏறி தந்தையுடன் சிறைக்கு செல்ல தயாரான சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சபையில் எடுத்துரைத்தாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கைகட்சிதலைவர்பிணைமுறிமோசடிமத்தியவங்கி
Comments (0)
Add Comment