அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல், மரண தண்டனையை ஒழிப்பை முன்னெடுப்பதற்கான பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண தண்டனையை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தொடங்க இனியும் தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தூக்கு தண்டனையை சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என அரசுசாரா அமைப்புகள் பலவும் வலியுறுத்தி வரும் நிலையில், சட்ட ஆணையத்தின் இந்த பரிந்துரை புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.