மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி…

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு எதிராக இன்னும் ஓரிரு தினங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

இத்தகவலை அந்த கட்சியின்  பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர  தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழைய முறைப்படி தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளதாகவும், .அதனை விரைவாக முன்னெடுக்கவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்ல முழு நாடாளுமன்றமே இதற்கு அனுமதியளிக்கும் என்றும், அவர் கூறியுள்ளார்.

இல்லையெனில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர  மேலும்  தெரிவித்துள்ளார்

தயாசிறி ஜயசேகரநீதிமன்றம்மாகாண சபை தேர்தல்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி
Comments (0)
Add Comment