மாங்குளம் நகர்ப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை..

நாட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முப்படைகளின்  தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகராக காணப்படுகின்ற மாங்குளம் நகர் பகுதியில் பிரதான வீதிகளில் இராணுவத்தினரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு ராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


குறிப்பாக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகின்ற வாகனங்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வருகின்ற  வாகனங்களும்,

அதேபோன்று முல்லைத்தீவு வீதியில் வருகின்ற வாகனங்கள் துணுக்காய் வீதியினூடாக வருகின்ற வாகனங்கள் என அனைத்து  வாகனங்களை மறித்து பயணிகள் இறக்கப்பட்டு சோதனையிடப்பட்ட பின்னர், வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் மக்கள் யுத்த காலங்களில் எதிர்கொண்டதை போன்ற போக்குவரத்து நடைமுறைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

சோதனைவாகனங்கள்
Comments (0)
Add Comment