இந்தியா தமிழகத்தில் மீன்களை பதப்படுத்தும் போது அதில் ஃபார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன
இதனை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் மீன்சந்தையில் 45 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அவ்வாறு வேதி பொருட்கள் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்ததுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் 3 நாட்கள் நடத்திய சோதனைக்கு பின்பு மீன்களை பதப்படுத்தப்படுவதற்கு ரசாயனம் கலக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது