கிளிநொச்சி முகமாலை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் மக்கள் மீள்குடியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தமது காணிகளை துப்பரவு செய்யும் போது ஆபத்தான வெடிபொருட்களை தாம் காணுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது முகமாலை முன்னரங்க நிலைகளாக இரு தரப்பினர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் இடம்பெற்ற பகுதியாகும்.
அதன்பின் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அப்பகுதிகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் பெருமளவான வெடிபொருட்கள் அகற்றப்பட்டிருந்தது.
எனினும் தற்போதும் முகமாலை பகுதிகளில் ஆபத்தான வெடிபொருட்கள் தொடர்பில் பொது அமைப்புக்கள் மற்றும் அரச தரப்புக்களால் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ன.