முல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு ஆளுனரை சந்தித்தும் தீரவில்லை மாவட்ட செயலகம் முன் பேருந்துகளை நிறுத்தி போராட்டம் தொடர்கிறது..

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் வடமாகாண சபையின் செயற்ப்பாடுகளை கண்டித்தும் தமக்கு உரிய தீர்வு கோரியும் இன்று தமது சேவைகளை நிறுத்தி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மாவட்ட செயலகம் முன்பாக தமது பேருந்துகளை கொண்டுவந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்

குறிப்பாக தமது மாவட்டத்தில் உள்ள பேருந்துகளுக்கு மாதத்தில் பத்து பன்னிரண்டு நாட்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுவதாகவும் ஏனைய மாவட்ட பேருந்துகள் அனைத்து நாளும் சேவையில் ஈடுபடுகின்றன எனவும் தமது பிரச்சனைகளை கேட்டறிந்து பின்னர் வழித்தட அனுமதி வழங்குமாறு கோரிய போதும் இன்று அனுமதிப்பத்திரம் வளங்கப்பட்டதனையும் தமது கோரிக்கைகளை தம்மோடு கலந்துரையாடி முடிவேடுக்குமாறுமே போராட்டம் முன்னெடுக்க படுகிறது

இருப்பினும் இன்று முல்லைத்தீவு வருகைதந்த வடமாகாண ஆளுநரிடம் கருத்துக்களை கூறியபோதும் வடமாகாண போக்குவரத்து அதிகாரசபை மற்றும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் இன்றி தான் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர்களை சந்தித்து இவை தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்

இருப்பினும் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இந்நிலையில் தமது போராட்டத்துக்கான தீர்வு கிடைக்கும் வரை தாம் போராட போவதாகவும் தீர்வின்றேல் சாகும் வரை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் குதிப்போம் எனவும் தெரிவித்தனர்

இதேவேளை முல்லைத்தீவில் மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்ப்பட்ட பொது அமைதியாக இருந்த மாகாண சபை வடமராட்சி கிழக்கில் அட்டை தொழிலாளர்கள் வந்துவிட்டனர் என்றவுடன்  போராட்டங்களை நடத்தினர்  இவ்வாறே எமது பிரச்சனையிலும் எம்மை பார்க்கின்றனர் இந்த நிலை மாறி எமக்கு உடனடி தீர்வுதர முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தனர்

பேருந்து உரிமயாளர்கள்போராட்டம்முல்லைதீவு
Comments (0)
Add Comment