முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு

2009 ம் ஆண்டு மே மாதம் 18 திகதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெறுகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வர்த்தகர்கள் கடைகளை அடைத்து துக்கதினமாக அனுசரிக்குமாறு கோரப்பட்டதற்கமைவாக இன்று முல்லைத்தீவு மாவட்டமெங்கும் வர்த்தக நிலையங்களை பூட்டி இன்றைய நாளை துக்கதினமாக அனுசரித்து வருகின்றனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, தண்ணீரூற்று, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் வர்த்தகர்கள் கடைகளை பூட்டி தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

கடையடைப்புமுல்லைத்தீவுமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Comments (0)
Add Comment