மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு சகலவழிகளிலும் அரசினை பாதுகாத்துக்கொண்டு மக்களின் காணிப்பிரச்சனை காணாமல் போன பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது- நாடாளமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்..

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் பங்கு பற்றி உரையாற்றி நாடாளமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

இந்த மகாவலி எல் வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

மகிந்தராஜபக்சவில் ஆட்சிகாலத்தில்  இரண்டாயிரம் ஏக்கருக்குமேல்  வழங்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் அதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் வவுனியாவில் நடமாடும் சேவை ஊடாக அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தமாதம் 6ஆம் திகதி 8சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதற்கான ஆதாரம் உங்களிடம் என்ன இருக்கின்றது என்று சவால் விட்டு பேசியுள்ளார் அங்கே கலந்து கொண்ட ஒரு பாராளமன்ற உறுப்பினராவது முல்லைத்தீவு மாவட்டத்தில மகாவலி எல் வலயத்திற்கு கீழ் எட்டுப்பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் ஆறுமாத காலத்திற்குள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது என்ற செய்தியனை அங்கு சொல்லாமல்

கடந்த மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு சகலவளிகளிலும் அரசினை பாதுகாத்துக்கொண்டு மக்களின் காணிப்பிரச்சனை காணாமல் போன பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது ஆகவே இன்றைய மக்கள் போராட்டம் போல் தொடர்ச்சியாக அரசியல்கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம்தான் தீர்வு காணப்படவேண்டும் என்றும்அவர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம்ஆர்ப்பாட்ட பேரணிசிவசக்தி ஆனந்தன்மகிந்தராஜபக்ச
Comments (0)
Add Comment