மேகதாது திட்டத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பில்லை : கர்நாடக அரசு பதில் மனு

காவிரியின் குறுக்கேயான மேகதாது, சிவசமுத்திரம் திட்டங்களுக்கும் தமிழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

 காவிரியின் குறுக்கே அணை கட்டுவதோ, வேறு பணிகளை செய்யவோ தடை விதிக்கக் கோரி தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான தனது பதில் மனுவை கர்நாடகம் தாக்கல் செய்தது.

 அப்போது, மேகதாது, சிவசமுத்திரம் திட்டங்களுக்கும் தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இவ்விரு திட்டங்களும் கர்நாடக பகுதியிலேயே நடப்பதாகவும் கர்நாடகம் தெரிவித்துள்ளது.

 இதனால் தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான கருத்து அழைப்பை திரும்பப்பெறமுடியாது என்று கர்நாடகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இதற்கு பொருந்தாது என்றும், உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்காமல் காவிரியாற்றின் குறுக்கே எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாது என்றும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்கர்நாடக அரசுகாவிரிசிவசமுத்திரம் திட்டம்தமிழகம்பதில் மனுமேகதாது
Comments (0)
Add Comment