அந்த விலங்கு
ஓடும், கடக்கும், இறக்கும்
ஆழ உறைந்து போகும்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும்
இருளும் அதுவேயாகும்
அந்தப்பறவை
பறக்கும, கடக்கும், இறக்கும்
ஆழ உறைந்து போகும்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும்
இருளும் அதுவேயாகும்
அந்த மீன்
நீந்தும, கடக்கும், இறககும்
ஆழ உறைந்து போகும்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும்
இருளும் அதுவேயாகும்
அந்த மனிதன்
உண்பான், உறங்குவான், இறந்திடுவான்
ஆழ உறைந்து போவான்
அதுவே இரவின் ஆழ் உறைவாகும்
இருளும் அதுவேயாகும்
வானில் வெளிச்சம் தெரியும்
கண்கள் மங்கிக் கூசும்
நட்சத்திரம் மின்னும்
கீழே இறத்தல்
மேலே ஒளித்தல்
அந்த மனிதன் மறைந்தான்
நிழலும் அழியும்
கைதிக்கு விடுதலை…
‘குவும்’, ‘குவும்’;
எங்கள் குரலுக்கு
பதில் சொல்லு
-கபொன் பிக்மி நாட்டார் பாடல்
தமிழ்வடிவம் – தென்மயிலை சண்முகன்