யாழில் டெங்கு நோய் தொடர்பில் அவசர ஆய்வுகள்…

யாழ் குடாநாட்டில் அச்சத்தை தரும் வகையிலான அசாதாரணமான நுளம்புகளின் பெருக்கம் மற்றும் அதிகரித்து வரும் டெங்கு நோயின் தாக்கம்  பற்றிய அவசர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த  விசேட அவசரக் கூட்டம் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளர் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.
இதன்போது  சுகாதாரத் திணைக்கள, பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் உள்ளுராட்சித் திணைக்களங்கள் என்பவற்றின் பணிகளை மேலும் முன்னேற்றுவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்கள் கூடிய அக்கறையுடன் தமது வளவுகளிலும் வீடுகளின் உள்ளும் நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் தொடர்பாகவும்  வலியுறுத்தப்பட்டது.
இதுவரை காலமும் இலங்கையில் இல்லாத புதிய வகையான டெங்கு வைரஸ் தற்போது நாட்டில்  காணப்படுவது தொடர்பாகவும் இது அதிகரித்த இறப்பு வீதத்தினை ஏற்படுத்தக் கூடும்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆய்வுகள்டெங்கு வைரஸ்பரம்பல்மக்கள்விழிப்புணர்வு
Comments (0)
Add Comment