யாழ். வல்லையில் இரு இளைஞர்கள் கைது..

யாழ்.வடமராட்சி வல்லை நாலு சந்திப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து குறித்த பகுதியில் பொலிஸார் திடீர்ச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகத்துக்கிடமான முறையில் அங்கு நின்றிருந்த இரு இளைஞர்களிடம் சோதனை செய்தபோது ,அவர்களிடம்  280 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருட்களை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதான இருவரும் யாழ். வடமராட்சி உடுப்பிட்டி மற்றும் வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருவர்இளைஞர்கள்கைதுவல்வெட்டிதுறை
Comments (0)
Add Comment