ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இத்தகவலை ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைப்பாளர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.
அதோடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அமைச்சரவை ஒன்று பெயரிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி – மஹிந்த தரப்பின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிகப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கும் தரப்பை, அரசாங்கமாக தொடர்ந்து செயற்பட அனுமதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.