கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஹக்கீமின் அதிருப்தியாளர்கள் தற்போது செயற்பட்டுவருகின்றனர்.
இது தனியாக முஸ்லிம்களின் அபிலாசைகளை நோக்காகக்கொண்டு இயங்கும் கட்சியாக இருக்கும்என்று சேகு இஸ்ஸதீன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர் புதிய அரசியல் முன்னணியில்இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தமது அரசியலை தனிப்பட்ட வாழ்க்கைக்காகபயன்படுத்தி வருகிறார்.
முஸ்லிம்களுக்காக குறிப்பாக கிழக்கின் முஸ்லிம்களின் நலன்களைஅவர் புறந்தள்ளி வருகிறார் என்றும் இஸ்ஸதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.