ரஷ்யா மற்றும் வடகொரிய அதிபர்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடப்பதை முன்னிட்டு விளாடிவோஸ்டாக் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் நேற்ரையதினம் அங்கு சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையே விளாடிவோஸ்டாக் நகரின் ரஸ்கி தீவில் உள்ள ஈஸ்ட் ஃபெடரல் பல்கலைக்கழக வளாகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதேவேளை முதன் முறையாக ரஷ்யா சென்றுள்ள கிம், அணு ஆயுதம் குறித்து புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.