ரிஷாட் பதியுதீனை காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்குமானால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்குமானால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எச்சரித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தெரிவுக்குழுவின்மூலம் கொண்டுசெல்வதா அல்லது நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு வாக்கெடுப்புக்கு விடுவதாக என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் கோரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் , அமைச்சராக இருக்கும் போது விசாரணைகளை சரியாக மேற்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்ட சார்ள்ஸ், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக விவாதம் நடத்தி நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு கோரியமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் ரிஷாட் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதனை முன்வைத்து ரிஷாட் ற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை 64 பேரின் கையெழுத்துக்களுடனான குறித்த பிரேரணை கடந்த 16ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சார்ள்ஸ் நிர்மலநாதன்ரிஷாட் பதியுதீன்
Comments (0)
Add Comment