வடக்கிலுள்ள முப்படைகளுக்கும் மூன்று மாத கால அவகாசம்!

2009 மே 19 ஆம் திகதியளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை வழங்குவதற்கு, மூன்றுமாதகால அவகாசத்தை ஸ்ரீ அரசாங்கம் கோரியுள்ளது.

நாடாளுமன்றம், சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்று (04) பிற்பகல் 1 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர், உதய பிரபாத் கம்மன்பில, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரிடம் கேள்வி கேட்டிருந்தார்.

அதாவது, 2009 மே 19, 2015 ஜனவரி 08 மற்றும் 2016 செப்டெம்பர் 30 ஆகிய திகதிகள் அளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே எவ்வளவு என்பதை கேட்டிருந்தார். கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, இக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சு மூன்றுவாரகால அவகாசத்தை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

அரசுஇராணுவ முகாம்கள்இராணுவம்வடமாகாணம்
Comments (0)
Add Comment