வனவள பாதுகாப்பு பிரிவால் அபகரிக்கப்பட்டுள்ள காணி பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

வனவள பாதுகாப்பு பிரிவால் அபகரிக்கப்பட்டுள்ள காணி  பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(01) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று மாலை 200 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள பாதுகாப்பு பிரிவால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் மற்றும் மக்களது காணிகளுக்குள் எல்லை கற்கள் போடப்பட்டுள்ளமை மற்றும் கால்நடை வழப்போருக்கு  மேச்சல் தரவைக்கு தேவையான நிலங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது

குறித்த கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் முல்லைத்தீவு மாவட்ட வனவள வள திணைகள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இருப்பினும் இந்த கலந்துரையாடலுக்கு வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் இந்த விடயம் தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டார் இந்த கலந்துரையாடலிற்கு     ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

கலந்துரையாடலின் இறுதியில் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் வடமாகாண சபை உறுப்பினர் து ரவிகரன் ஆகியோர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்

அனுமதிஊடகங்கள்மறுப்புவிவசாய அமைச்சர்
Comments (0)
Add Comment