வவுனியாவில் கடும்காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கிவீசப்பட்டன!

வவுனியாவில் வீசிய பலத்த காற்று காரணமாக 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பலத்த காற்றினால் நெடுங்கேணியில் நேற்று (13) ஒரு வீடு சேதமடைந்த நிலையில், இன்று (14) வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம் போன்ற பகுதிகளில் 13 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவங்களில் குறித்த வீடுகளின் 36 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment