விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது சுவர் விழுந்து உயிரிழப்பு!

வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெடன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வை.லக்மிதா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த மதில் உடைந்து வீழ்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுமி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைசிகிச்சைசிறுமிசுவர்படுகாயம்பலிமதில்மலையகம்
Comments (0)
Add Comment