வவுனியா வடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக மண்ணான வெடுக்குநாறிமலையில் ஆலயம் அமைத்து வழிபடமுடியாதென தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
தேவையாயின் வெடுக்குநாறிமலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பால் ஆலயம் அமைத்து வழிபடமுடியும் என தொல்லியல் திணைக்களம் அறியத்தந்திருப்பதாக நெடுங்கேணி பொலிஸார் ஆலய அறங்காவலர் சபைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னதாக வெடுக்குநாறி மலைக்கு தமிழ் மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்ததையடுத்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது வெடுக்குநாறிமலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பால் ஆலயம் அமைத்து வழிபடமுடியும் என தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.