ஸ்டாலின் வெற்றிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றத்தில் சந்தீப் சக்சேனா நேரில் சாட்சியம்

சென்னையை அடுத்த கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா உயர்நீதிமன்றத்தில் நேரில் சென்று சாட்சியம் அளித்தார்.

இதுதொடர்பாக மேயர் சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரான தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தாம் பணியில் இல்லாததால் இதுதொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார்.

இதையடுத்து, சந்தீப் சக்சேனாவிடம், மு.க. ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அன்றைய தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா மீண்டும் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் நடைபெற்றதாகவும், எனவே மு.க.ஸ்டாலினின் வெற்றி செல்லாது எனவும் அறிவிக்க கோரி மேயர் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.

சந்தீப் சக்சேனாசாட்சியம்சென்னைசைதை துரைசாமிதேர்தல் அதிகாரிமு.க.ஸ்டாலின்வழக்கறிஞர்விசாரணை
Comments (0)
Add Comment