அடிப்படை வசதிகள் கேட்டு மாதவரம் மண்டல அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சி மாதவரம் 3–வது மண்டலத்தில் உள்ள 12 வார்டுகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மாதவரம் பகுதி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாதவரம் மண்டல அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவி தமிழ்செல்வி தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்கம் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மண்டல அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாதவரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

ஆர்ப்பாட்டம்கழிப்பிடம்குடிநீர்சங்கம்சென்னைமாதவரம்மாநகரம்மின்விளக்குவாலிபர்
Comments (0)
Add Comment