அடுத்த தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் புதிய முதலமைச்சர் வேட்பாளர் ..

வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வார இதழொன்றுக்கு  வழங்கிய செவ்வியிலேயே அவர் இதை கூறியுள்ளார்.

மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாப்பை விக்னேஸ்வரன் மீறிவிட்டதாகவும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அவர்  நிறைவேற்றத் தவறி விட்டதாகவும்  சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மக்களின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்,  ஆனால் ஆளுநரின் கையில் இன்னமும் நிதி உள்ளதாகவும்  கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆங்கில ஊடகம்எம்.ஏ.சுமந்திரன்செவ்விபுதிய வேட்பாளர்முதலமைச்சர்வடக்கு
Comments (0)
Add Comment