அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளார் சி.வி விக்கினேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 12ம் திகதி  அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பில்,  விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக,  சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என்று, த தே கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன்  கூறி இருந்தார்.

இந்நிலையில் இதற்கான பதிலை எதிர்வரும் 12ம் திகதி தாம் வெளியிடவிருப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டு வார பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்ல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அறிவிப்புதேர்தல்முதலமைச்சர்வடமாகாணம்
Comments (0)
Add Comment