சென்னையில் அடுத்த 2 நாட்களில் வெயில் 105.8 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. சென்னையில் அடுத்த 2 நாட்களில் வெயிலின் அளவு 105.8 டிகிரி வரை உயரக்கூடும் என்றும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பகலில் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. வெயில் கொளுத்துவதால் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே தயங்குகின்றனர். தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பநிலை அதிகபட்சமாக 105.8 டிகிரி வரை உயரக் கூடும் என்றும், அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அனல் காற்றின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். இதே போல், காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும், பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.