அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர், அங்கிருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார்
மனித உரிமைகள் தொடர்பில், 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை முன்னேற்றகரமான பயணத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் குறைப்பாடுகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.