அண்மைய சம்பவங்கள் தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – கருணாநிதி

பாகிஸ்தான் உளவுப்பிரிவுக்காக தமிழகத்தில், இலங்கையர்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அண்மைய சம்பவங்கள் தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக திராவிட முன்னேற்றக்கழக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரான அருண் செல்வராஜா, பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமையை அடுத்தே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை முதல் தடவையாக இடம்பெறவில்லை. முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன. ஏற்கனவே தமிழகத்தில் வைத்து பாகிஸ்தானுக்காக உளவுப்பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமீம் அன்சாரி, சகீர் ஹூசைன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் தகவல்படி அவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரி ஒருவரின் பணிப்பின் பேரிலேயே இயங்கியுள்ளனர்.

தற்போது தமிழர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது  தமிழக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் யாவும் தமிழகத்தின் பாதுகாப்பு விடயங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன.

குறிப்பாக தமிழகம் பயங்கரவாதிகளுக்கான சுவர்க்கமாக மாறியுள்ளதாக தமது ஆட்சியின் போது தற்போதைய முதல்வர் குற்றம் சுமத்தியிருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, ஜெயலலிதாவின் ஆட்சியின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையஏற்படுத்தியுள்ளதாகசம்பவங்கள்தமிழகதலைவர்திராவிடதெரிவித்துள்ளார்பதற்றத்தைமக்கள்மத்தியில்மு.கருணாநிதிமுன்னேற்றக்கழக
Comments (0)
Add Comment