அதிகாரி தகாத வார்த்தையில் திட்டியதால் அகதி தற்கொலை!

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே  கப்பலூர் தொழிற்பேட்டை டொயோட்டா ஷொ ரூம் பின்னால் உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை நேற்று 06.03.2016 அன்று பார்வையிடச்சென்ற அதிகாரி துரைப்பாண்டியன் என்பவர், முகாமிற்குள் சோதனையிட்டபோது இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த அகதி ரவி என்பவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார்.

சொல்லாமல் திடீரென வந்தால் அகதிகள் எல்லோரும் எப்படி உள்ளேயே இருக்கமுடியும், மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க  சென்றதால் தாமதம்.அதை ஏற்க வேண்டுமென கேட்டதை அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என ரவி கேட்டுள்ளார்.

அதற்கு அதிகாரி இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு என கூறினார்.உடனே ரவி பக்கத்திலிருந்த மின்கம்பி மரத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி செத்துள்ளார். உடலை கைப்பற்றி நடந்ததை விபத்து என மறைக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் உடனே அங்கு வர அகதிகள் கதறி வேண்டுகின்றனர்.

அந்த அதிகாரியை காவல்துறையினர் கூட்டிச்செல்ல முற்பட்ட போது அகதிளுக்கும் காவல்துறைக்குமிடையில் கை கலப்பு நடந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள அகதிகள், ரவி யின் மரணத்திற்கு நீதி கேட்டும், தரம்தாழ்த்தி அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கோரியும் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனையடுத்து தமிழக மக்களின் நீதிக்குரலை கேட்டு கதறி வருகின்றனர்.

அத்துடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிஈழ அகதிதற்கொலைதிருப்பரங்குன்றம்மதுரைமுகாம்
Comments (0)
Add Comment