அதிமுக பிரமுகர் காதைக்கடித்து துப்பிய பாமக பிரமுகர்!

கலசபாக்கம் அருகே உள்ள மேல் வன்னியனூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 35). அ.தி.மு.க. பிரமுகரான இவர், மேல் வன்னியனூர் ஊராட்சி மன்ற கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). பா.ம.க. பிரமுகர். இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு மறுநாள் (17–ந் தேதி) பரசுராமனுக்கும், பரமசிவத்துக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதற்கிடையே நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

பா.ம.க. படுதோல்வி அடைந்ததால் பரமசிவம் வருத்தத்துடன் காணப்பட்டார். இதற்கிடையே வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமன் மீது பா.ம.க. பிரமுகர் பரமசிவத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

பரசுராமனிடம் சென்று பரமசிவம் தகராறில் ஈடுபட்டார். அப்போது பரமசிவம், அ.தி.மு.க. பிரமுகர் பரசுராமனை தாக்கி அவருடைய இடது பக்க காதை கடித்து துப்பினார்.

அங்கிருந்தவர்கள் மோதலை தடுத்து பரசுராமனை மீட்டனர். துண்டிக்கப்பட்ட காதுடன் அவர் கலசபாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகே துண்டிக்கப்பட்ட காது மீண்டும் இணைக்கப்படுமா? என தெரியவரும்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுககலசபாக்கம்காதுசிகிச்சைபடுதோல்விபாமகமருத்துவமனைவெற்றி
Comments (0)
Add Comment