அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்தமைக்கு எதிராக யாழில் கண்டன போராட்டம்

நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்தமைக்கு எதிராக,  கண்டன போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுள்ளது.

குறித்த  போராட்டம்  யாழ் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது அரசாங்கம் மக்களின் அத்தியாசிய உணவுப் பொருட்களான அரிசி, சீனி, தேய்ங்காய் , மல்லி, மிளகாய், பருப்பு, உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அதுமட்டுமன்றி, எரிவாயு, பெற்றோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டமையினால் போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்கள்ஆர்ப்பாட்டம்எரிவாயுபெற்றோல்மண்ணெண்ணெய்யாழ்
Comments (0)
Add Comment