அத்துமீறல் தொடர்ந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும்

காஷ்மீர் எல்லையில் அத்துமீறல் தொடர்ந்தால், கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக இருநாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்ற கொடியமர்வு கூட்டம் மூன்றாவது முறையாக நேற்று நடைபெற்றது.

இந்தியா சார்பில் எல்லைப் பாதுகாப்பு படை டிஐஜி பிஎஸ் கசானா தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, பாகிஸ்தான் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இரு நாடுகளின் நலன் கருதியே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என இந்திய சார்பில் எடுத்துரைக்கப்பட்டது. தாக்குதல் தொடர்ந்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அதிகாரிகளை எச்சரித்ததாக, எல்லைப் பாதுகாப்பு படை சார்பில் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்த இந்தியரை உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அத்துமீறல்இந்தியாஎச்சரித்துள்ளதுஎனஎல்லையில்கடுமையானகாஷ்மீர்கொடுக்கப்படும்தொடர்ந்தால்பதிலடிபாகிஸ்தானை
Comments (0)
Add Comment