அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்

பள்ளிப்பாளையத்தில், அனுமதியின்றி இயங்கிய சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இடித்து அகற்றினர்.  நாமக்கல் மாவட்டம் ஆவுத்திப்பாளையம் மற்றும் சமய சங்கிலி பகுதிகளில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  

உடனடியாக அங்கு விரைந்த அதிகாரிகள், சமய சங்கிலி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கரும்பு தோட்டத்திற்குள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 6 சாயப்பட்டறைகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர்.

இதேபோன்று ஆவுத்திப்பாளையத்தில் இயங்கி வந்த 6 சாயப்பட்டறைகளும் இடித்து அகற்றப்பட்டன. சாயப்பட்டறைக்குள் இருந்த இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால், 30 லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சாயப்பட்டறை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

அகற்றம்அதிகாரிகள்அனுமதிஇடிப்புகட்டுப்பாட்டுசாயப்பட்டறைபள்ளிப்பாளைளயம்மாசு
Comments (0)
Add Comment